கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி இருப்பவர்களுக்கான வீட்டில், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
1. நோய்வாய்ப்பட்டவர் அதிக நீர் ஆகாரம் மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்யவும்.
2. நோய்வாய்ப்பட்டவரோடு ஒரே அறையில் இருக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்தவும்.
3. அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை குறைந்தது 20 விநாடிகள் தண்ணீரால் கழுவ வேண்டும். முக்கியமாக உணவு சமைப்பதற்கு முன் சமைக்கும் பொழுதும், சமைத்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
4.நோய்வாய்ப்பட்டவருக்கென தனி பாத்திரம், துணி, படுக்கை விரிப்பு, ஆகியவை பயன்படுத்தவும். பயபடுத்திய பொருட்களை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும்.
5. உடல் நலம் சரியில்லாதவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை சானிடைசர் போட்டு நன்கு துடைக்க வேண்டும்.
6. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.