சுற்றுச்சூழல்

மதுரை தீபாவளி கொண்டாட்டம்: 3 நாட்களில் 2,400 ட‌ன் குப்பைகள் அகற்றம்

மதுரை தீபாவளி கொண்டாட்டம்: 3 நாட்களில் 2,400 ட‌ன் குப்பைகள் அகற்றம்

webteam

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் கடந்த மூன்று நாட்களில் 2,400 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தூங்கா நகரமான மதுரையில் பண்டிகைகள், விழாக்கள் என்றாலே ஆடம்பர கொண்டாட்டங்கள் அரங்கேறுவது வழக்கம். தீபாவளி பண்டிகை என்பதால் இந்த கொண்டாட்டம் இன்னும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் விளைவாக மதுரையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2,400 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் நாள்தோறும்‌ சுமார் 600 டன் குப்பைகள் அகற்றுப்படுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் நாளொன்றுக்கு கூடுதலாக 200 ‌டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சுமார் 4,000 துப்பறவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.