சுற்றுச்சூழல்

கேரள பேரழிவு: ’இயற்கையை அழித்தலே காரணம்’ என ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

sharpana

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் அம்மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது

.

இந்நிலையில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ’கேரளாவில் மட்டுமல்ல கனமழை. மேற்குத்தொடர்த்தி  மலையில் ஒவ்வொரு ஆண்டும்  காரணமாக கனமழை பேரழிவு ஏற்படுகிறது.

இது இயற்கையை சூறையாடுவதன் விளைவுதான் குறிப்பிட்டுள்ளார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது’ என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே, கேரளாவில் தென்மேற்கு பருவமழையின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே அபாயத்தை சந்தித்துள்ளது கேரளா.