சுற்றுச்சூழல்

ஆகஸ்ட் 15 முதல் டிஜிட்டல் மயமாகும் சுகாதாரத்துறை!

sharpana

பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் பதிவுகளை ஒரே இடத்தில் ஆன்லைனில் மூலம் தெரிந்துகொள்ளும் ‘தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்’ திட்டம் கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளார்.

இந்த டிஜிட்டல் ஹெல்த் மிஷன் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு முழுமையான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அடையாளங்கள், நோயாளிகளின் தனிப்பட்ட சுகாதாரத்துறை பதிவுகள், டாக்டர் மற்றும் சுகாதார வசதி உள்ளிட்ட நான்கு வசதிகளை இந்தத் தளம் கொண்டிருக்கிறது. மேலும், நோயாளிகளின் அனுமதி பெற்றப் பிறகே, அவர் குறித்த தகவல்கள் பகிரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோயாளிகள் தங்கள் ஆதாரையும் இதனுடன் இணைத்துக்கொள்ளலாம். அனைத்து மாநிலங்களின் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், ஆய்வுகள் முழுவதும் இதில் வந்துவிடும். மேலும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்கும் டிஜிட்டல் கையெழுத்தும் இடம்பெறவுள்ளது. ஆயூஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய சுகாதார ஆணையம்  இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு 470 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது