சுற்றுச்சூழல்

தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் வெப்பம்: சேலத்தில் 100 டிகிரி பதிவு

Veeramani

தமிழகத்தில் மீண்டும் 100 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த முறை பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். இந்த நிலையில் மழை, பனிக் காலத்தை கடந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. அதன்படி சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சாவூர், மதுரை, கரூர், வேலூர் ஆகிய இடங்களில் 99 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகியதால் மக்கள் அவதியடைந்தனர்.

சென்னையில் 94 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகும் என கூறியிருந்த நிலையில், படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது.