சுற்றுச்சூழல்

குழந்தைகள் இறப்பு விகிதம் 8% குறைந்துள்ளது: மத்திய அரசு

குழந்தைகள் இறப்பு விகிதம் 8% குறைந்துள்ளது: மத்திய அரசு

webteam

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நாட்டில் 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தனர். அது கடந்தாண்டு 8 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது 2015ம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளில் 37 பேர் உயிரிழந்தனர். அந்த இறப்பு விகிதம் கடந்தாண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 34 ஆக குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம்  குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆண், பெண் குழந்தைகளுக்கிடையேயான பாலின இறப்பு விகிதம் 10% குறைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.