சுற்றுச்சூழல்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

Sinekadhara

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, இன்று தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது. பல்வேறு கட்டமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு செய்த பின்னர், இன்று மாலை, அறிக்கையை தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணனிடம், குழுவினர் சமர்ப்பிக்கவுள்ளனர்.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி எண்ணெய் எரிவாயு எடுக்கப்பட்டதால், அப்பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளதாகவும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளைக் கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் இருந்ததாகவும், குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.