சுற்றுச்சூழல்

செல்ல நாயுடன் தூக்கமா..? எச்சரிக்கை!

செல்ல நாயுடன் தூக்கமா..? எச்சரிக்கை!

webteam

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் நாளடைவில் படுக்கை அறை வரை வருவதுண்டு. இவ்வாறு பழக்கப்படுத்தி கொள்வது ஆபத்து என எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

மனிதர்களின் ஆரோக்கியத்துக்குத் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்குவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை உண்டு. அதுபோல தான் செல்லப்பிராணிகளை வளர்ப்பத்திலும் ஒரு வரைமுறை உள்ளது.

நாள் முழுவதும் வெளியில் சென்றுவருவோர் வீட்டிற்கு வந்தவுடன் தங்களது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட விரும்புகின்றனர். இதனால் தாம் செல்லமாக வளர்க்கும் நாய்க் குட்டியை படுக்கையறை வரை அனுமதிக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்க்குட்டியோடு படுக்கை அறை வரை விளையாடுவது தூக்கத்தை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோன்று படுக்கையறையில் செல்லப்பிராணியை அனுமதிப்பது தூக்கத்தின் தரத்தை கெடுக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 40 பேர் ஏழு இரவுகள் தங்கள் செல்லப்பிராணியுடன் தூங்கவைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் செல்லப்பிராணியுடன் தூங்கியவர்கள் தூக்கக் குறைபாடுகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.