சுற்றுச்சூழல்

காற்று மாசுபடுவதால் ஐரோப்பாவில் ஆண்டுக்கு 5000 பேர் மரணம்

webteam

டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 5000 பேர் ஐரோப்பாவில் மட்டும் இறப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

தி ஜர்னல் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவில், வரையறுக்கப்பட்ட அளவை விட, டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 38,000 பேர் மரணமடைவதாக கூறப்பட்டுள்ளது. டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றுமண்டலத்தில் கணிசமான அளவிற்கு மாசு ஏற்படுத்துகிறது.

போக்ஸ்வேகன் நிறுவனம் தயாரிக்கும் கார்களில் இருந்து வெளியேறும் புகை அளவை, வரையறுக்கப்பட்ட அளவை விட குறைத்துக் காண்பித்தது அம்பலமாகியது. ஆனால், அந்நிறுவனத்தின் கார்கள் அதிகமான அளவு புகையை வெளியிடுவது கண்டறியப்பட்டது. மேலும் பல கார் நிறுவனங்கள் இதுபோல மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு 5000 பேர் மரணமடைவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் புகையால் ஏற்படும் மாசைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.