சுற்றுச்சூழல்

வால்பாறை: புழுதி பறக்க சண்டை போட்டுக் கொண்ட காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ

வால்பாறை: புழுதி பறக்க சண்டை போட்டுக் கொண்ட காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ

kaleelrahman

வால்பாறை அருகே இரண்டு யானைகள் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,,வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் கூட்டமாக 7 யானைகள் சுற்றித்திரிந்தது.

அதில், இரண்டு ஆண் யானைகள் திடீரென்று சண்டை போட்டுக் கொண்டது. இதை அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது,