2019-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நுண்ணிய துகள் மாசுபாடு வெளிப்பாட்டின் காரணமாக அகால மரணமடைந்த 3.07 லட்சம் பேரில் குறைந்தது 1.78 லட்சம் உயிர்களை சுத்தமான காற்று இருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கை தெரிவிக்கிறது.
2019-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட 3,07,000 அகால மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய காற்றின் தர வழிகாட்டுதல்களால் காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று திங்களன்று வெளியிடப்பட்ட இந்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
காற்று மாசுபாடு ஐரோப்பாவில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்து காரணியாகும். இது இதய நோய், பக்கவாதம், அகால மரணம், நுரையீரல் நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளது.