சுற்றுச்சூழல்

2040-க்குள் பெட்ரோல், டீசல் கனரக வாகனங்களுக்கு தடை: பிரிட்டன் புதிய திட்டம்

Veeramani

2040ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் புதிய கனரக வாகனங்களின் விற்பனையை பிரிட்டன் அரசு தடை செய்ய உள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட "டிரான்ஸ்போர்ட் டிகார்பனைசேஷன்" எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செயல்படுத்த உள்ளது பிரிட்டன் அரசு. காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக இருக்கும் அனைத்து வாகனங்களையும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அகற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.