சுற்றுச்சூழல்

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு - எங்கே தெரியுமா?

JustinDurai

ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற, தால் ஏரியை ஒட்டி இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டுள்ள துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் மலர்த் திருவிழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது துலிப் மலர்த் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர்த்தோட்டம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும், வண்ணமயமான மலர்களைக் காண குவிந்தனர். பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையும் படிக்கலாம்: தேர்வுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஹிஜாப் தொடர்பான மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்