சுற்றுச்சூழல்

2020இல் 106 புலிகள் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்

2020இல் 106 புலிகள் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்

JustinDurai
2020ஆம் ஆண்டில் 106 புலிகள் இறந்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கும் அமைச்சர், கடந்த 2019ஆம் ஆண்டு 27 புலி வேட்டை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், அவற்றில் 17 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில், 2020ஆம் ஆண்டு 14 சம்பவங்கள் மட்டுமே நேரிட்டதாகவும் அதில் 8 புலிகள் வேட்டையாடப்பட்டதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார். 2019இல் 44 புலிகளும் 2020 இல் 20 புலிகளும் இயற்கையான முறையில் இறந்துபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் கடந்த ஆண்டு 106 புலிகள் உயிரிழந்து விட்டதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் புலி தாக்கி 44 பேர் மரணமடைந்து விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.