சுற்றுச்சூழல்

வேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய 4000 கிலோ கொண்ட கடல்வாழ் உயிரினம்

EllusamyKarthik

23 அடி நீளம், 4000 கிலோ எடை கொண்ட கடல்வாழ் உயிரினம் இங்கிலாந்தின் வேல்ஸ் கடர்கரையில் ஒதுக்கியுள்ளது. முகம் இல்லாத அந்த உயிரினம் வேல்ஸ் கடற்கரை ஓரம் ஒதுங்கியுள்ளது. Pembrokeshire பகுதியில் உள்ள பிராட் ஹெவன் சவுத் பீச்சில் கடந்த வாரம் இந்த அடையாளம் தெரியாத உயிரினம் கரை ஒதுக்கியுள்ளது. 

இந்த உயிரினம் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. பெரிய அலையில் சிக்கி கடலில் இருந்து இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினத்தின் வகை என்ன என்பது தெரியவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

இந்த உயிரினம் எதனால் எப்படி இறந்தது எனவும் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.