கல்வி

தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்காக.... அரசு வெளியிட்ட அறிவிப்பு

தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்காக.... அரசு வெளியிட்ட அறிவிப்பு

webteam

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்காக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் “24.03.2020 அன்று நடைபெற்ற பன்னிரெண்டாம்  தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளிடப்படும் என்றும் 27.07.2020 அன்று நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு , மறுதேர்வு முடிவடைந்த பின்னர் தேர்வு எழுதிய அனைத்துப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.