கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை திட்டமிட்டபடி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போனால் தேதிகளில் மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்பட்டது. வழக்கு காரணமாக மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதால், கால்நடை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாளை கால்நடை மருத்துவப் படிப்பில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கும், தொழிற்பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 21ஆம் தேதி தொழிநுட்பப் படிப்புகளுக்கான கலந்தய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.