கல்வி

"தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், விளையாட்டையும் மறக்காதீர்கள்" - பிரதமர் மோடி உரை

"தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், விளையாட்டையும் மறக்காதீர்கள்" - பிரதமர் மோடி உரை

Veeramani

மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவேண்டும் என்றும் அதே நேரத்தில், விளையாட்டு மற்றும் சமுதாய வாழ்வை மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கான கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார்.

அப்போது அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி தொழில்நுட்பத்தில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தினால் உலகில் பல கதவுகள் அவர்களுக்காக திறக்கும் என்றார். அதே நேரத்த்தில் விளையாட்டையும் மறந்துவிடக்கூடாது என்றவர் புதிய கல்விக்கொள்கையில், விளையாட்டு கல்வியின் ஒரு அங்கமாகவே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.