யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் சரியாக பதியாமல் இருந்தால் , தேர்வு எழுதுபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 18-ம் தேதி (ஞாயிறு) நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்களுக்கான ஹால்டிக்கெட், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) இணையதளத்தில் (www.upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை அந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் தேர்வின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் சரியாக பதியாமல் இருந்தால் , தேர்வு எழுதுபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.