கல்வி

தேர்வு கட்டணம் குறித்து அண்ணா பல்கலைக்கழக அறிக்கையில் திருப்தி இல்லை - உயர் நீதிமன்றம்

webteam

தேர்வு கட்டணம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையில் திருப்தி இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரத்தான தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தேர்வுகளுக்கு 141 கோடி செலவாகக் கூடிய நிலையில் கட்டணம் மூலம் 118 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. 

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தேர்வு கட்டணம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையில் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வு கட்டணத்தை வசூலித்து பல்கலைக் கழகங்களுக்கு செலுத்தாத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் எனவும் முழு விவரங்களுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 24 வரை அவகாசம் அளித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.