கல்வி

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வுகள்: பள்ளிக் கல்வித்துறை 

Veeramani

கொரோனா சூழலால் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் 50 மதிப்பெண்களுக்கு அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்று தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதில் வினாத்தாளை பதிவிட்டு, விடைகளை எழுதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாளை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெறவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.