கல்வி

"பாகுபாடுகளைக் களையவே மாணாக்கர்களுக்கு சீருடைகள்" - கர்நாடக கல்லூரிகள் வளர்ச்சிக்குழு

Veeramani

மதம் மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் களைவதற்காகவே மாணாக்கர்களுக்கு சீருடைகள் அளிக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அம்மாநில கல்லூரிகள் வளர்ச்சிக்கு குழு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து சென்ற பேராசிரியருக்கு தனியார் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததால், அவர் பணியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஸ் அஸ்வதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா கல்லூரி வளர்ச்சிக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், ஏழை - பணக்காரன், இந்து - முஸ்லிம் அல்லது பிற மதங்கள் என்ற வகையில் மாணாக்கர்களிடையே பாகுபாடு நிலவக் கூடாது என்பதற்காகவே சீருடைகள் வழங்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கருத்து கூறிய தலைமை நீதிபதி, கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்கள் கொண்ட ஆடைகள் கூடாது என்ற இடைக்கால உத்தரவு மாணாக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டார்.