கல்வி

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க வசதியில்லை?...கல்லூரி மாணவி தற்கொலை

Veeramani

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்க முடியாத காரணத்தால், 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேற்குவங்க மாநிலம் மால் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு மாணவி ஜெயந்தி பவுலி திங்கள்கிழமை இரவு, சரிபுகுரி பகுதியில் உள்ள தப்ரிபாரா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கிராந்தி போலீஸ் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளர் திலீப் சர்க்கார் தெரிவித்தார்.

நான் தினசரி கூலியாக வேலை செய்கிறேன் என்றும், எப்படியாவது பலவகைகளில் கஷ்டப்பட்டுத்தான் தனது மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துகிறேன் என்றும் அவரது தந்தை அவிராம் பவுலி போலீசாரிடம் தெரிவித்தார்.

"என் மகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினாள். ஆனால் வசதி இல்லாத காரணத்தால் என்னால் அவளுக்கு அதை வாங்கித்தர முடியவில்லை, இதற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள். ஆனால் அவள் இப்படி ஏதாவது செய்வாள் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் யாரிடமாவது கடன் வாங்கியாவது அவளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்திருப்பேன் " என்று கண்ணீருடன் அவிராம் கூறினார்.