கல்வி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Rasus

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV-ல் 9351 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிப்பு 14.11.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவகாசம் டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், விண்ணப்பிக்க விரும்புவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் மட்டும் போதுமானது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,351 காலி பணியிடங்களை நிரப்ப நடைபெறும் குரூப் 4 தேர்வில் பங்கேற்க சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.