கல்வி

குரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

குரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

webteam

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

கிராம நிர்வாக அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது. காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவு ஜூன் 14ல் தொடங்கியது.

அதன்படி இன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதன்பின் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. www.tnpsc.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் பதிவு செய்யலாம்.

அதுபோல தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 16ம் தேதியுடன் முடிகிறது. அதிகமான தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அதிக சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.