கல்வி

ஆசிரியர் தகுதி தேர்வு ! ஏப்ரல் 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு

webteam

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12 வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெறவேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது. 

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக கூறப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12 வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இணையதளம் சரிவர வேலைசெய்யாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்த நிலையிலும், விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சலுக்கு வரும் உறுதித்தகவலிலும் காலதாமதம் ஏற்பட்டதாலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது