கல்வி

தமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு!

தமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு!

webteam

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 56 லேப் அசிஸ்டெட்ண் பணியிடங்கள் நேரடியாக நிரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக தடயவியல் அறிவியல் துணைநிறுவன சேவையில் 56 லேப் உதவியாளர்கள் பணிக்கு நேரடித் தேர்வு மூலம் ஆட்கள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 01/07/2018ஆம் தேதி அன்று 18-30 வயதுக்கிடையே இருக்க வேண்டும். பள்ளி மேல்நிலைப் படிப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவில் பயின்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.100 ஆகும். 

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி நாள். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். இந்த பணிக்காக சம்பளம் குறைந்த பட்சம் ரூ. 19,500 ஆகவும், அதிகபட்சம் ரூ.62,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

மேலும் கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_02_new_laboratory_assistant.pdf இதில் காணலாம்.