கல்வி

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

webteam

முதல்வர், துணை இயக்குநர் மற்றும் துணை இன்ஜினியர் ஆகிய பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஆட்களை தேர்வு செய்யவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் முதல்வர், தொழில்துறை மைய பயிற்சியாளர் அல்லது பயிற்சித் துணை இயக்குநர் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதேபோன்று தொழில்துறையின் துணை இன்ஜினியர் பணிக்கு 32 பேர் வேலைக்கு எடுக்கப்படவுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலியான பணிகளுக்கு 24.12.2018ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் முதல்வர், தொழில்துறை மைய பயிற்சியாளர் அல்லது பயிற்சித் துணை இயக்குநர் பணிகளுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்துறையின் துணை இன்ஜினியர் பணிக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை ஊதியமாக தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர், பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர் குறைந்த பட்சம் 24 நான்கு வயது நிரம்பியவராகவும், அதிக பட்சம் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆனால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது. 

துணை இன்ஜினியர் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவாரகவும், அதிக பட்சம் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதிலும் பட்டியல் இனத்தவருக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து முழுமையாக அறிவதற்கு டி.என்.பி.எஸ்.சி இணையத்தளத்தை அணுகலாம்.