தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் மருந்து ஆய்வாளர், ஜூனியர் அனாலிஸ்ட் போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. மருந்து ஆய்வாளர் (Drug Inspector)
2. ஜூனியர் அனாலிஸ்ட் (Junior Analyst in the Drugs Testing Laboratory)
காலிப்பணியிடங்கள்:
1. மருந்து ஆய்வாளர் - 40
2. ஜூனியர் அனாலிஸ்ட் - 09
மொத்தம் = 49 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 12.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 12.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2019
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.05.2019
தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2019 (காலை மற்றும் மதியம்)
ஊதியம்:
1. மருந்து ஆய்வாளர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,19,500 வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.
2. ஜூனியர் அனாலிஸ்ட் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.36,400 முதல் அதிகபட்சமாக ரூ.1,15,700 வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
1. நிரந்த பதிவு முறையில் பதிவு செய்ய கட்டணம் - ரூ.150
2. மருந்து ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.200
3. ஜூனியர் அனாலிஸ்ட் பணிக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.150
4. இரண்டு பணிகளுக்குமான தேர்வுக்கட்டணம் - ரூ.200
குறிப்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
கல்வித்தகுதி:
1. மருந்து ஆய்வாளர் என்ற பணிக்கு, இளங்கலைப் பட்டப்படிப்பில் பார்மஸி (Pharmacy) / பார்மசிடிகல் சயின்ஸ் (Pharmaceutical Science) / Medicine with specialization in Clinical Pharmacology / மைக்ரோபயோலஜி (Microbiology) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. ஜூனியர் அனாலிஸ்ட் என்ற பணிக்கு, இளங்கலைப் பட்டப்படிப்பில் பார்மஸி (Pharmacy) / பார்மசிடிகல் கெமிஸ்ட்ரி (Pharmaceutical Chemistry) / வேதியியல் (Chemistry) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக ஒரு வருடம் மருந்துத் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிப்போர் ஆன்லைனில், டிஎன்பிஎஸ்சியின் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத் தேர்வு
மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.