கல்வி

வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு

webteam

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18ம் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார். www.tnau.ac.in  என்ற இணையதள முகவரியை தெரிவித்த அவர் ஜூன் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் எனவும் குறிப்பிட்டார். தரவரிசை பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது.

இணையதள வழியில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி தொடங்குகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் துவங்குகின்றன.