கல்வி

புகையிலை பொருட்களை விற்பனை செய்பவரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் 2வது முறையாக தேர்ச்சி

EllusamyKarthik

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பகிரிபரவன் (Pakribarawan) வட்டத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் குமார். புகையிலை பொருட்களை விற்பனை செய்பவரின் மகனான இவர் இரண்டாவது முறையாக UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் தனது மாவட்டத்திற்கு புகழ் தேடி தந்துள்ளார்.

அவர் கடந்த 2016-இல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் 728-வது ரேங்க் எடுத்திருந்தார். இந்த முறை 535-வது ரேங்க் எடுத்துள்ளார். 

இந்திய வருவாய் துறை அதிகாரியான அவர் தற்போது டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். 

இருந்தும் ஆட்சியர் ஆவதே தனது இலக்கு என்ற நோக்கத்துடன் மீண்டும் முயற்சித்த அவர் இந்த முறை முன்பை காட்டிலும் ரேங்க் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவரது இந்த சாதனையை கண்டு அவரது தாயார் யசோதா தேவியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிறைந்துள்ளது. கொரோனா முடக்கத்தால் அவரது தந்தை கடையை திறக்கவில்லை என தெரிகிறது. வறுமை தங்கள் குடும்பத்தை வாட்டி வதைத்த போதும் பிள்ளையின் கல்வியை ஒருபோதும் அவர்கள் மறுப்பு சொன்னதில்லையாம். அதன் பலனாக இன்று இரண்டாவது முறையாக அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளார்.