தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 6 வாரங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் கடந்த மாதம் வழக்குகளை முடித்து வைத்தார்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார்.