அதிகளவிலான பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உயர்க் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலாவில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் இதனை தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
“நம் நாட்டில் பெண்கள் உயர் கல்வியைத் தொடர வேண்டும். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளில் அதிகளவிலான பெண்கள் படிக்க வேண்டும். தொழில்நுட்ப துறைகளில் பெண்களின் சிறப்பான பங்களிப்பு நமது நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு பரிணாமமாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.