கல்வி

சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப மையங்கள்

Veeramani

சென்னை ஐஐடியின் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனும் ஆஷா ஃபார் எஜுகேஷன் அமைப்பும் இணைந்து தமிழ்நாட்டில் ஊரக தொழில்நுட்ப மையங்களை தொடங்கவுள்ளன.

இதன் மூலமாக தொலைதூர, கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு கணினி அறிவியல் கல்வியை இந்த மையங்கள் வழங்கவுள்ளன.

பள்ளி நேரம் முடிந்ததும் மாலையில் வந்து படிக்கும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் இந்த மையங்கள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி கணினிகள் மூலம் பயிற்றுவித்தல் நடைபெறும் என்பதால் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.