கல்வி

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தோ்வு: பணி வாய்ப்பு கிடைக்குமா? அமைச்சர் பதில்

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தோ்வு: பணி வாய்ப்பு கிடைக்குமா? அமைச்சர் பதில்

webteam

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “மத்திய வங்கியின் மூலம் இதுவரை நூறு கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு இ பாக்ஸ் நிறுவனம் மூலம் 10 நாட்களாக மாணவர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. தோ்வு அறிவிக்கப்பட்ட தேதியில் மாணவா்கள் தயாராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7500 மாணவா்கள் இடம் பெற்றுள்ளனா். நீட் தோ்வில் மாணவர்களை பங்கேற்க வைப்பது குறித்து முதல்வா்தான் முடிவெடுப்பார்” என்றார்.

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பியபோது, இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் 7200 ஆசிரியா்கள் கூடுதலாக உள்ளனா். இதையெல்லாம் ஆய்வு செய்த பின்னா் தான் அரசு முடிவெடுக்க முடியும் என பதிலளித்தார்.

மேலும் நெல் கொள்முதல் நியைங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளார்.