புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இருமொழிக்கல்வி மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். புதியக் கல்விக் கொள்கையில், மும்மொழிக்கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழக மக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.