கல்வி

டிச.7-இல் கல்லூரி மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: தமிழக அரசு

webteam

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி இறுதியாண்டு வகுப்புகளை டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி “கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலை கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், விடுதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்(இளநிலை, முதுநிலை) டிசம்பர் 7 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் 2020 - 2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி ஒன்றாம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.