கல்வி

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- புதிய சுற்றறிக்கை

webteam

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என தமிழக அரசின் தொடக்க கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் 5-ஆம் வகுப்பிற்கு 1 கிலோ மீட்டருக்குள்ளும், 8-ஆம் வகுப்பிற்கு 3 கிலோ மீட்டருக்குள்ளும் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால், பல எதிர்ப்புகள் எழுந்தன. அதனால், அதை திருத்தம் செய்து தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றொரு சுற்றறிக்கையை தற்போது அனுப்பியுள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 ரூபாயும், 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 200 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டு இடங்களில்சேர்ந்த மாணவர்களும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ‌உள்ள குறுவள மையங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. குறுவள மையங்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு இடையில் விடைத்தாள்களை மாற்றி திருத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது