கல்வி

மருத்துவ படிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ படிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Sinekadhara

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அத்துடன் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நவ.16-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க இன்றுமுதல் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் tnmedicalselection.net என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நவ.16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. எனவே நவம்பர் 18-ஆம் தேதிக்கு மேல் மருத்துவ கலந்தாய்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.