கல்வி

ஏற்றுமதி, இறக்குமதி செய்வது எப்படி? : அரசு சார்பில் பயிற்சி வகுப்பு..!

webteam

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி வகுப்புகள் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தமிழக அரசின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஷூம் (ZOOM) செயலி மூலம் காணொலி பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் 26/ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தினந்தோறும் இரண்டு மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வது எப்படி ? அதற்கான உரிமத்தை பெறுவது எப்படி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். அத்துடன் எந்த நாட்டிற்கு எந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் ? எந்த பொருட்களை எல்லாம் ஏற்றுமதி செய்ய தடைகள் உள்ளன ? உள்ளிட்ட விவரங்களும் கற்றுத்தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பெற நினைக்கும் நபர்கள் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 86681 02660 மற்றும் 94445 57654 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.