கல்வி

65% பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பின்போது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள் - ஆய்வு முடிவு

Sinekadhara

65% பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பின்போது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள், மேலும் 7% ஆசிரியர்களும் சாப்பிடுகிறார்கள் என்று மும்பையில் ஓர் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கவனித்து வருகின்றனர். ஆரம்ப வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போதே உணவுகளை ஊட்டுகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் 65%க்கும் அதிகமான பெற்றோர்களே ஆன்லைன் வகுப்பின்போது தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், கிட்டத்தட்ட 55% மாணவர்கள் உணவு ஆன்லைன் வகுப்பின்போது உணவு உண்பதை ஆசிரியர்கள் கவனிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதில் நான்கில் ஒரு பங்கு பெற்றோர் குழந்தைகளுக்கு சூடாக உணவு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சர்வேயில் 7% ஆசிரியர்களும் ஆன்லைன் வகுப்பின்போது உணவு உண்பதை ஒத்துக்கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் ஆன்லைன் வகுப்பின்போது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுகுறித்த சரியான புரிதல் இல்லாததால் வகுப்புகளில் மட்டும் கவனம் செலுத்தினர். ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் வகுப்பு குறித்த புரிதல் இருப்பதால் பெற்றோர்கள் வகுப்பு நேரங்களிலும் உணவு வழங்குகிறார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். அதேசமயம் கிட்டத்தட்ட 20% ஆசிரியர்கள், வகுப்பு நேரங்களில் உணவு கொடுப்பதால் பெற்றோர்களும், குழந்தைகளும் பாடத்தை கவனிப்பதில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் 25% பெற்றோர்களுக்கு குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்துவதால் உணவு ஊட்டுவது மிகவும் எளிதாக இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாறுபடுவதால் குழந்தைகள் ஸ்க்ரீன் முன்பே தூங்கிவிடுவதாக 40% பெற்றோர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தகவல் உறுதுணை: Times of India