ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50% இட ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு இந்த ஆண்டு நிச்சயம் முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. இதைத்தொடர்ந்து ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50% இட ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர்.