கல்வி

ஆந்திராவில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்.... மாணவர்கள் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிப்பு

ஆந்திராவில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்.... மாணவர்கள் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிப்பு

webteam

ஆந்திர‌ மாநி‌லத் தலைநகர் அமராவதியில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகம் திறக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் அமராவதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வி வளாகத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் திறந்து
வைத்தனர். எஸ்ஆர்எம் பல்லைக்கழக நிறுவனரும், வேந்தருமான பாரிவேந்‌தர் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் சத்தியநாராயணன் அப்போது
உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆந்திர அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அ‌ரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என ஏராளாமானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து
புதிய கல்வி‌ வளாகத்தை சந்திரபாபு நாயுடுவும் வெங்கையா நாயுடுவும் பார்வையிட்டனர். அமராவதியில் உருவாகியுள்ள எஸ்ஆர்எம் கல்வி வளாக‌த்தில் ஆந்திராவின்
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாணவிக்கு இலவசக் கல்வி வழங்கப்பட உள்ளது. இத்தகவலை கல்வி வளாக தொடக்க விழாவில் எஸ்ஆர்எம்
பல்கலைக்கழகத்தின் நிறுவன‌ரும் வேந்தருமான பாரிவேந்தர் தெரிவித்தார். விளையாட்டில் ஆர்வம் மிக்க 100 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு 5
ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்‌றும் அவர் தெரிவித்தார். இது தவிர அமராவதியை சுற்றியுள்ள 30 கி‌ராமத்தினரின் நலனுக்காக மருத்துவமனை விரைவில்
உருவாக்கப்படும் என்றும் பாரிவேந்தர் கூறினார்.