தெற்கு ரயில்வேயில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
1. கார்பென்டர்
2. எலக்ட்ரீசியன்
3. ஃபிட்டர்
4. மெசினிஸ்ட்
5. பெயிண்டர்
6. வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்த காலியிடங்கள் = 3,529
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2019 (நாளை), மாலை: 05.00 மணி வரை
வயது வரம்பு: (01.12.19 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 22 / 24 வயது வரை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் போன்றோர் கட்டணம்
செலுத்த தேவையில்லை.
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் தவிர மற்றவர்களுக்கான கட்டணம்:
ரூ.100
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.
கல்வித்தகுதி:
1. Freshers: முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் குறைந்தபட்சமாக, 10, +2 வகுப்பில் பயின்று 50%
மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. ITI: ஐடிஐ (ITI) படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற
பாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சியுடன் பயிற்சி சார்ந்த நேஷனல் ட்ரேடு சான்றிதழை
பெற்றிருத்தல் வேண்டும்.
3. MLT: +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் பயின்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
இன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க
தகுதியற்றவர்கள்.
பயிற்சி காலம்:
1. ஐடிஐ படித்தவர்கள்: ஒரு வருடம்
2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: ஒரு வருடம் 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.sr.indianrailways.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று
விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு,
1. http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/CW_PER_ACTAPP_Notification_2020.pdf
3.
http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/CW_POD_ACTAPP_Notification_2020.pdf -
போன்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.