சட்டீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலுள்ள சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) நிறுவனத்தில், பணிபுரிவதற்கான 76 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. Mining Sirdar, Technical & Supervisory Grade - ‘C’
2. Deputy Surveyor, Technical & Supervisory Grade - ‘C’
காலிப்பணியிடங்கள்:
1. Mining Sirdar, Technical & Supervisory Grade - ‘C’ = 62
2. Deputy Surveyor, Technical & Supervisory Grade - ‘C’ = 14
மொத்தம் = 76 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2019
தபாலில் (ஆப்ஃலைனில்) விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 28.02.2019
வயது வரம்பு:
ஓபிசி பிரிவினர் : 18 முதல் 33 வயது வரை இருத்தல் வேண்டும்.
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.31,852 வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
1. Mining Sirdar, Technical & Supervisory Grade - ‘C’ என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனுடன் 3 வருட டிப்ளமோ மைனிங் இன்ஜினியரிங் என்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். முதலுதவி & எரிவாயு பரிசோதனை பயிற்சி தகுதி சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.
2. Deputy Surveyor, Technical & Supervisory Grade - ‘C’ என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். டிஜிஎம்எஸ் வழங்கும் சர்வே பயிற்சி தகுதி சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன்லைனிலும், தபாலிலும் (ஆப்ஃலைன்) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர், http://www.secl.gov.in/ - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தபாலில் (ஆப்ஃலைனில்) விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட ஆப்ஃலைன் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களை, தகுந்த கல்வி, வயது மற்றும் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களோடு தற்போதைய 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் இணைத்து பதிவு தபால் வழியில் அனுப்ப வேண்டும்.
தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (P/MP),
SECL,
Seepat Road,
Bilaspur (CG),
Pin - 495 006
மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு http://59.144.110.235:8079/srd/english.pdf- என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.