கல்வி

அரசுப்பள்ளிகளில் LKG, UKG... 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

நிவேதா ஜெகராஜா

அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை நடத்துவதற்கு தொகுப்பு ஊதியத்தில் 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதிவாய்ந்த சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 2,381 கடந்த
மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்த LKG, UKG வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட காரணத்தால், முதற்கட்டமாக 2,500 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யவும், சிறப்பாசிரியர் நியமனத்தில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (DTE) படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

செய்தியாளர்: ரமேஷ்