கல்வி

"அப்ரண்டிஸ்ஷிப் நடைமுறையை மீண்டும் தொடங்குக" -  ரயில்வே துறைக்கு நிதியமைச்சகம் ஆலோசனை

Veeramani

அப்ரண்டிஸ்ஷிப் எனப்படும் பணிப்பழகுநர் நடைமுறையை மீண்டும் தொடங்குமாறு ரயில்வே துறைக்கு மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணிப்பழகுநர் ஆக பயிற்சி பெறும் வாய்ப்பை 94 ஆண்டுகளாக ரயில்வே வழங்கி வந்தது. அந்நடைமுறை கடந்த 2015ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் அதை மீண்டும் தொடங்க நிதியமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.

ரயில்வே துறையை லாபகரமாக நடத்த பல ஆலோசனைகளை நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிணைப்பது, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவதை மறு பரிசீலனை செய்வது உள்ளிட்ட ஆலோசனைகளையும் நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.