கல்வி

கேரளாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறார்களை மீட்க மீட்பு மையங்கள்: பினராயி விஜயன்

Veeramani

கேரளாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ள சிறார்களை மீட்க, மீட்பு மையங்களை அமைத்திட முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு சவாலாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து பள்ளி மாணவர்களைக் காக்க, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே சிறார்களை பாதுகாத்திடும் வகையில், மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான சிறார்களை மீட்பதற்காக சிறப்பு மீட்பு மையங்களை அமைக்க பினராயி விஜயன் ஆணையிட்டுள்ளார். போதை மறுவாழ்வு மையங்களைப் போல இந்த மையங்கள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மையங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் என்பது மாய உலகம் என்ற உண்மையை சிறார்களுக்கு உணர்த்திட நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளன.