பிளஸ் டூ மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில புதுமையான என்ஜினீயரிங் மற்றும் கணினியியல் சார்ந்த படிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
பி.டெக் - ஜெனிடிக் என்ஜினீயரிங்
மரபணுப் பொறியியல் இன்று அபார வளர்ச்சி பெற்று வருகிறது. தாவரம் முதற்கொண்டு மனிதர்கள் வரை மரபணு முக்கியமானது. டிஎன்ஏ, புரதம், செல் வளர்ச்சி, திசு வளர்ப்பு, புதிய இனங்களைக் கண்டறிதல், நோய் நீக்குதல், மரபணு கோளாறுகளை சரிசெய்தல் என அதன் பயன்பாடுகள் அதிகம். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாக எடுத்துப் படித்திருக்கவேண்டும்.
இப்படிப்பில் பிரின்ஸிபல்ஸ் ஆப் ஜெனிடிக்ஸ், மைக்ரோபயாலஜி, இம்யூனாலஜி, மாலிக்யூலர் பயாலஜி ஆப் ஜீன், பிரின்சிபல்ஸ் ஆப் மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, செல் ஸ்ட்ரக்ச்சர் அண்ட் டைனமிக்ஸ், பயோமேத்தமேட்டிக்ஸ், ஆர்கானிக் மெக்கானிசம்ஸ் இன் பயாலஜி, பிரின்ஸிபல்ஸ் ஆப் ட்ரான்ஸ்மிஷன் ஜெனிடிக்ஸ், மாலிக்யூலர் டெக்னிக்ஸ் இன் ஜெனிடிக் என்ஜினீயரிங், பயோ ஸ்டாட்டிஸ்டிக்ஸ், ஹியூமன் ஜெனிடிக்ஸ், பிளாண்ட் ஜெனிடிக்ஸ் ஸ்டெம் செல் பயாலஜி அண்ட் ஜீன் தெரபி, அனிமல் செல் கல்ச்சர் அண்ட் ட்ரான்ஸ்ஜெனிக் டெக்னாலஜி உள்ளிட்ட பாடங்கள் கற்றுத்தரப்படும்.
பாலிமர் என்ஜினீயரிங்
எளிய மூலக்கூறுகளின் நீண்ட பிணைப்பு என்பதே பாலிமருக்கு அறிவியல் தரும் விளக்கம். இயற்கை மற்றும் செயற்கை இழைகளைப் பற்றி படிக்கும் படிப்பு. இயற்கை இழைகள் என்பது பட்டு, கம்பளி, டிஎன்ஏ, செல்லுலோஸ் மற்றும் புரதங்கள். செயற்கை இழைகள் என்பது நைலான், பாலியெஸ்டர், பாலிஎத்திலீன், டெப்லான் மற்றும் இபாக்சி. செயற்கை இழைகளைப் பற்றியும், அதனை பயன்பாட்டுக்கேற்ப எப்படி உருவாக்குவது, எப்படி வடிவமைப்பது, எப்படி தயாரிப்பது பற்றி கற்பிக்கப்படும்.
தமிழகத்தில் சில கல்லூரிகளில் மட்டுமே இப்படிப்பு கற்பிக்கப்படுகின்றது. விமானத்தை வடிவமைக்கப் பயன்படும் தெர்மோசெட்ஸ், கார், ஆட்டோமொபைல் உள்ளிட்டவற்றில் பயன்படும் பைபர் பிளாஸ்டிக், மருத்துவத்துறையில் பயன்படும் பயோ டிகிரேடபிள் பாலிமர்ஸ் அத்தனையும் பாலிமர் துறையின் கொடையே. என்விரான்மென்டல் ஸ்டடீஸ், பிளாஸ்டிக் மெட்டீரியல் டெக்னாலஜி, பாலிமர் ரேயாலஜி, சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆஃப் ரப்பர்ஸ், பாலிமர் அனாலிசிஸ் அண்ட் கேரக்டரைஸேசன், ஸ்ட்ரெங்த் ஆப் மெட்டீரியல்ஸ், பிளாஸ்டிக் அண்ட்ரப்பர் டெஸ்டிங் டெக்னாலஜி, மோல்ட் அண்ட் டை டிசைன், பாலிமர் நானோகாம்போசைட்ஸ் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத்தரப்படும். பாலிமர் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஏரோஸ்பேஸ், ஆட்டோமொபைல்,பயோமெடிக்கல், பிளாஸ்டிக்ஸ், மொபைல் ஃபோன் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பி.இ. - ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்
விண்வெளியில் ஏவப்படும் ராக்கெட், ஸ்பேஸ் கிராப்ட், அதன் வடிவமைப்பு, எந்திரவியல், ஏரோடைனமிக்ஸ் உள்ளிட்டவற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் படிப்பு. விண்வெளித்துறையில் சாதனைப் படைக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு. இயற்பியல், வேதியியல், என்ஜினீயரிங் டிராயிங், கம்ப்யூட்டர் புரோகிராமிங், என்ஜினீயரிங் மெக்கானிக்ஸ், இன்ட்ரோடக்ஷன் ஏரேஸ்பேஸ் டெக்னாலஜி, மெக்கானிக்ஸ் ஆப் ப்ளூயிட்ஸ், இன்ட்ரோடக்ஷன் டூ தெர்மோடைனமிக்ஸ், மெட்டீரியல்ஸ் பார் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸ், ஏரோ டைனமிக்ஸ், கம்ப்ரஸிபிள் ப்ளூயிட் ப்ளோ, ஏரோஸ்பேஸ் ஸ்ட்ரக்ச்சர்ஸ், ஏரோஸ்பேஸ் புரப்பல்ஷன், ஏவியானிக்ஸ், பிளைட் மெக்கானிக்ஸ், என்விரான்மென்டல்சயின்ஸ் அண்ட் சஸ்டயினபிலிட்டி, கம்ப்யூட்டேஷனல் ப்ளூயிட் டைனமிக்ஸ் பார் ஏரோஸ்பேஸ், ஏரோ டிசைன், பிளைட் டைனமிக்ஸ் அண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படும்.
பி.டெக். மரைன் என்ஜினீயரிங், பெட்ரோலியம் என்ஜினீயரிங், மைனிங் என்ஜினீயரிங் என ஒவ்வொரு துறைக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பை வழங்கும் பல்வேறு பொறியியல் படிப்புகள் உள்ளன.
கணினியியல் சார்ந்த படிப்புகள்
பிசிஏ - கிளவுட் டெக் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி
கணினித் துறையில் தகவல்களைச் சேமித்துவைப்பது தலையாயப் பிரச்சினை. அதற்குத் தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி. தற்கால வேலைவாய்ப்புகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட படிப்பு. இதற்கு ஐடி துறையில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மூன்றாண்டு படிப்பில் சேர பிளஸ் டூவில் கணிதத்தை முக்கிய பாடமாக படித்திருக்கவேண்டும். கம்ப்யூட்டர் பன்டமன்டல்ஸ் அண்ட் ஆர்கனை சேஷன், சி புரோகிராமிங், இன்ட்ரோடக்ஷன் லினக்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், பன்டமண்டல் ஆப் ஸ்டோரேஜ் மேனேஜ்மெண்ட், ரீசனிங் அண்ட் திங்கிங், இன்பர்மேஷன் செக்யூரிட்டி பன்டமன்டல்ஸ், சாப்ட்வேர் என்ஜினீயரிங், புரோகிராமிங் இன் ஜாவா, கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், எத்திக்கல் ஹேக்கிங் பன்டமன்டல்ஸ், கிரிப்டோகிராபி பன்டமன்டல்ஸ், இன்ட்ரோடக்ஷன் கிளவுட் டெக்னாலஜி, பன்டமன்டல்ஸ் ஆப் டேட்டா சென்டர், விஷுவலைசேஷன் அண்ட் கிளவுட் செக்யூரிட்டி, ஐடி கவர்னன்ஸ், லினக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன், இன்ட்ரோடக்ஷன் டூ கிளவுட் கம்ப்யூட்டிங் சொல்யூஷன், மொபைல், வயர்லெஸ் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படும்.
பிசிஏ - டேட்டா சயின்ஸ்
இது தகவல் தொழில்நுட்ப யுகம். தகவல்கள்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது. உங்களைச் சுற்றி சந்தைப்படுத்துதல், விற்பனை, வாங்கத் தூண்டுதல் அனைத்திற்கும் டேட்டாதான் காரணமாக உள்ளது. நீங்கள் இணையத்தில் தேடிய தகவலை வைத்து, உங்களிடம் அத்தகைய விளம்பரங்களை மீண்டும் காட்டுவதற்கு டேட்டாக்களே அடிப்படை. இன்றைய சூழ்நிலையில் பல நிறுவனங்கள் டேட்டா அனலிஸ்ட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
பன்டமன்டல்ஸ் அண்ட் ஆர்கனைசேஷன், சி புரோகிராமிங், இன்ட்ரோடக்ஷன் லினக்ஸ், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், பன்டமண்டல் ஆப் ஸ்டோரேஜ் மேனேஜ்மெண்ட், ரீசனிங் அண்ட் திங்கிங், டேட்டேபேஸ் மேனேஜ்மெண்ட், லீனியர் அல்ஜிப்ரா, கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், சயின்டிபிக் புரோகிராமிங் யூஸிங் கீ, இன்பெரென்ஷியல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிக் டேட்டா அனாலிசிஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், எக்ஸ்புளோரட்டரி டேட்டா அனாலிசிஸ், டைம்ஸ் சீரிஸ் அனாலிசிஸ், மெஷின் லேர்னிங் அல்காரிதம்ஸ் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத்தரப்படும்.
பிசிஏ - மல்டிமீடியா அண்ட் அனிமேஷன்
எதையும் காட்சிப்படுத்துதலோடு சொன்னால்தான் பாமரர் முதல் படித்தவர் வரை எளிதாகப் புரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் வரை தங்களுடைய தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசேர்க்க மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் துறையினரை நம்பியுள்ளனர்.
மொபைல் அப்ளிக்கேஷன், கேம்ஸ்களுக்கு இவைதான் உயிரும் உருவமும் கொடுக்கின்றன. மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் துறையில் ஆர்வமுடையவர்களுக்கு ஏற்ற படிப்பு. கம்ப்யூட்டர் கான்செப்ட்ஸ் அண்ட் ப்ராப்ளம் சால்விங், டிஜிட்டல் லாஜிக் அண்ட் பன்டமன்டல்ஸ், டேட்டா ஸ்ட்ரக்ச்சர்ஸ், மைக்ரோ ப்ராசசர்ஸ் அண்ட் இட்ஸ் அப்ளிகேஷன்ஸ், இன்ட்ரொடக்சன் டூ அக்கௌண்டிங், அல்காரிதம் டிசைன் டெக்னிக்ஸ், சாப்ட்வேர் என்ஜினீயரிங், ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராமிங், கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ், கிராபிக்ஸ், மல்டிமீடியா சிஸ்டம்ஸ், இன்டர்நெட் புரோகிராமிங், கம்பைலர் டிசைன், கிரிப்டோகிராபி அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடங்கள் கற்றுத்தரப்படும்.