தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (கைரேகை) பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 202 உதவி ஆய்வாளர் (கைரேகை பிரிவு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண், மற்றும் மூன்றாம் பாலினத்தினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சந்தேகம் இருப்பின் தங்களது மாநகர காவல் ஆணையர் அலுவலகம் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உள்ள உதவி மையத்தை விண்ணப்பதாரர்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் – 29.08.2018
கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் – 28.09.2018
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அறிவியலில் ஏதாவது பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியை அணுகலாம்.